வெளிநாடுகளில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு நியூசிலாந்து நல்ல தேர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அங்குள்ள நட்பான மக்கள், தரமான கல்வி, தங்கிப் படிப்பதற்கான செலவு, படித்து முடித்த பின் வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆக்லாந்து பல்கலைக்கழகம், கேன்டர்பரி பல்கலைக்கழகம், லிங்கன் பல்கலைக்கழகம், மாஸ்ஸி பல்கலைக்கழகம், ஒடாகோ பல்கலைக்கழகம் உள்ளிட்டவை நியூசிலாந்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ் பெற்றவை ஆகும்.