தஞ்சை மாவட்டம் மானம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடி வரும் 12ஆம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடி, சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையே மானம்பாடியில் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.105 கட்டணம் வசூலிக்கப்படும். பேருந்துகள், லாரிகளுக்கு ரூ.360, 7 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களுக்கு ரூ.685 சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும்.