மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, ஒன்றிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme - UPS) ஜனவரி 24, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு குறைவான சேவை காலம் கொண்டவர்கள், அவர்களின் சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் பெறுவார்கள். ஓய்வூதியதாரர் மறைந்தால், கடைசியாக வழங்கப்பட்ட தொகையில் 60% குடும்ப ஓய்வூதியம் சட்டபூர்வமாக திருமணமான துணைவருக்கு வழங்கப்படும்.