மின்சார சேமிப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, ஏசி சாதனங்களில் வெப்பநிலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், இனிமேல் அறிமுகமாகும் ஏசிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் ஆக நிர்ணயிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சோதனை அடிப்படையில் இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.