ரூ. 500, ரூ. 20 மற்றும் ரூ. 10 கரன்சி நோட்டுகள் புதிதாக வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. காந்தி படங்கள் கொண்டிருக்கும் தற்போதைய கரன்சி நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னரான சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்து புதிய நோட்டுகளில் இடம்பெறும். இந்நிலையில், புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகளும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.