தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜன. 11) சட்டசபையில் பேசுகையில், "புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கிறார்கள். இதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம். அது வெளியானவுடன் தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஆலோசனையின்படி குழு அமைத்து செயல்படுத்தப்படும்" என்றார்.