திருவள்ளூர்: வீட்டில் தோசை சாப்பிட்ட பரத் (13) என்ற சிறுவன் உயிரிழந்தார். இந்நிலையில் தோசை சாப்பிடுவதற்கு முன்னர் பரத் கடையில் ‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்டது தற்போது தெரியவந்துள்ளது. நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரத் உயிரிழந்திருக்கிறார். சிக்கன் ரைஸ் தான் சிறுவன் உயிரை பறித்ததா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கும் நிலையில் குறித்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை விசாரிக்கிறது.