மாநில சுயாட்சியை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் ஷெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் நாகநாதன் உறுப்பினர்களாக இருப்பர். இந்த குழு 2026 ஜனவரி இறுதிக்குள் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கும் என முதல்வர் தெரிவித்தார்.