காதல் திருமணம் பதிவுசெய்ய முடியாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை

55534பார்த்தது
காதல் திருமணம் பதிவுசெய்ய முடியாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை
சேலம்: நல்லங்கியூரைச் சேர்ந்த கணேசன், இந்திராணி தம்பதியின் 3வது மகன் இளவரசன் (21). சலூன்கடை தொழிலாளி. இவர், தனது உறவுக்கார பெண் திவ்யாவை காதலித்து 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக திவ்யாவின் தந்தை போலீசில் புகாரளித்தார். போலீசார் அழைத்து விசாரணை நடத்தி திருமணத்தை பதிவு செய்து அதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பெண்ணுக்கு 21 வயது இருந்தால் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்து களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.