உயிரிழந்தவர்களின் பெயரை ஆதாரில் இருந்து நீக்கும் புதிய வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி குறித்து அதிகாரிகள் கூறியதாவது, "இறந்தவர் பெயரில் உள்ள ஆதாரை வைத்து நடைபெறும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாரிசு சான்றிதழ் போன்றவை வழங்கும்போது இந்த ஆதார் நீக்க சான்றிதழ் முக்கிய ஆவணமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.