தமிழகத்தில் புதிய மின் கட்டணம்? வெளியான தகவல்

76பார்த்தது
தமிழகத்தில் புதிய மின் கட்டணம்? வெளியான தகவல்
புதிய மின் கட்டண கணக்கிடும் முறை ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியை தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2022 ஆம் ஆண்டு வெளியான மின் கட்டண விபரத்தைப் புதிதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என்று பகிர்ந்து வருகிறார்கள். வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி