மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்படவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் உத்தரவு இன்றி புதிய கல்விக் கொள்கையை தாங்களாகவே அமல்படுத்த முடியாது என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு தொடர்பாக தங்கள் அறிவிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.