உணவு டெலிவரிக்கு 'ZAAROZ' என்ற புதிய செயலியை தொடங்குவதாக, நாமக்கல் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், டெலிவரிக்கு 'ZAAROZ' செயலியை இனி பயன்படுத்தப்போவதாக அனைத்து உணவகங்களும் தெரிவித்துள்ளனர். ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற பிரபல உணவு டெலிவரி நிறுவனங்கள் 35% வரை கமிஷன் எடுத்துக் கொள்வதாக உணவகங்கள் குற்றசாட்டை முன்வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.