புதிய ரூ.350 மற்றும் ரூ.5 நோட்டுகள் அறிமுகம் செய்திருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி இதை மறுத்துள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ, "சமூக வலைதளங்களில் பரவும் அனைத்தும் போலியான ரூபாய் நோட்டுகள். புதிய ரூபாய் நோட்டு எதையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. தற்போது ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன" என்று விளக்கமளித்துள்ளது.