நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (ஆகஸ்ட் 05) நடைபெறவுள்ளது.