பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற பக்கத்துவீட்டுக்காரர்

81பார்த்தது
பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற பக்கத்துவீட்டுக்காரர்
கேரளாவின் ஆலப்புழாவின் பூச்சக்கல்லில் பெண்ணை அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் நபர் சுத்தயலால் தலையில் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சரவணன் மனைவி வனஜா (50) என்பவர் உயிரிழந்தார். நேற்று இரவு பக்கத்து வீட்டுக்காரரான விஜீஷ் என்பவர் வனஜாவைத் தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வனஜாவை எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இரு வீட்டாருக்கும் உள்ள முன்பகையே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி