மழையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுத முடியவில்லை எனவும் அதன் காரணமாக மறுதேர்வு நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் சென்னை ஆவடியில் தேர்வெழுதிய 13 பேர், குன்றத்தூரை சேர்ந்த 2 மாணவர்கள் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என கூறிய நீதிமன்றம் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது.