பெங்களூருவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'NC கிளாசிக் 2025' ஈட்டி எறிதல் போட்டியில், ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை நடந்த போட்டியில், 86.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெற்றிப் பெற்றுள்ளார். இது, இந்தியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியாகும். முதல் நாளில் கூட்டு முன்னிலையில் இருந்த நீரஜ், இந்த வெற்றியின் மூலம் தனிப்பெரும் முன்னிலையைப் பெற்று வெற்றியும் பெற்றார்.