தமிழகத்தில் வரவேற்பை பெற்று வரும் இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று (டிச. 30) அனுசரிக்கப்படுகிறது. பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நெல் ஜெயராமனை ஊக்கப்படுத்தி சுமார் 200 பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்கும் புரட்சிக்கு அச்சாணியே நம்மாழ்வார்தான். தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கிய பெருமைக்கு அவர் சொந்தக்காரர்.