பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ல் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், புதிய கல்விக்கொள்கையை திரும்பப் பெறுதல், 8வது ஊதிய குழுவை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இதில் ஜாக்டோ ஜியோ பங்கேற்க முடிவானதால், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் பங்கேற்கிறது' என்றார்.