நேஷன்ஸ் லீக் கால்பந்து கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றி கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி அசத்தியுள்ளது. பெர்லினில் நேற்று (ஜூன் 8) நடைபெற்ற போட்டியில் மோதிய ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் சம பலத்தில் விளையாடியதால் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 கோல்கள் அடித்து போர்ச்சுகல் அணி வெற்றியை தனதாக்கியது.