தேசிய தடயவியல் அறிவியல் பல்கலை., நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

66பார்த்தது
தேசிய தடயவியல் அறிவியல் பல்கலை., நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நுழைவுத் தேர்வு நடைபெற இருந்தது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக மாணவர்கள் பலர் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு சென்னை மட்டுமே தேர்வு மையம் என்பதால், நுழைவுச் சீட்டுடன் பலரும் சென்னைக்கு புறப்பட்ட நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி