தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருகிற ஜனவரி 24ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.