சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடுகளுக்கும் என பிரத்தியேக தேசிய கீதங்கள் எழுத்து வடிவில் இருக்கின்றன. ஆனால், எழுத்து வடிவில் அதிகாரப்பூர்வ தேசிய கீதம் இல்லாத நாடு உங்களுக்கு தெரியுமா? ஆம், ஸ்பானிஷ் நாட்டுக்கு என அதிகாரப்பூர்வ தேசிய கீதம் எழுத்து வடிவில் இல்லை. அதே நேரத்தில் லா மார்ச்சா ரியல் (தி ராயல் மார்ச்) என்ற இசை தேசிய கீதமாக ஒலிக்கப்படுகிறது. ஸ்பானிஷ் சமூகத்தின் பன்முகத்தன்மை, பிற பிரதிநிதித்துவ மக்கள், மொழி, கலாச்சார மரபுகள் காரணமாக அவர்களுக்கு என தனி தேசிய கீதத்தை ஸ்பானியர்கள் உருவாக்கவில்லை.