ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் இன்று (ஜன., 17) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 10ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக வேட்பாளர் சந்திரகுமாரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.