வேகமான வாழ்க்கை முறையால் தூங்குவதற்கு கூட நிறைய பேர் நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், மதிய நேரத்தில் 20-30 நிமிடங்கள் சிறிய தூக்கம் போடுவது உடல் மற்றும் மனத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இது மன அழுத்தத்தை குறைத்து, சிந்தனையை தெளிவாக வைத்திருக்க உதவும். மருத்துவ நிபுணர்களும் மதிய தூக்கத்தை பரிந்துரைக்கின்றனர். ஒரு சிறிய தூக்கம், நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு செயல்பட உதவுகிறது.