வயிற்றுக்குள் இருக்கும் குடல் புழுக்கள்.. எப்படி தடுப்பது?
நாம் அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதன் மூலம் புழுக்கள் வயிற்றுக்குள் நுழைவதற்கு வழிவகுக்கும். இதனால் வயிற்று வலி மற்றும் ஆசன வாயில் அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும். இந்த புழுக்களை தடுக்க நமது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், நகங்களை வெட்ட வேண்டும். சாப்பிடுவதற்கு முன், கழிப்பறைக்குச் சென்ற பிறகு, குழந்தைகளின் நாப்கின்களை மாற்றிய பின் கைகளைக் கழுவ வேண்டும். துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் கழுவவும்.