திருச்செங்கோடு தேர்த்திருவிழாவில் கல்யாண உற்சவம்

53பார்த்தது
திருச்செங்கோடு தேர்த்திருவிழாவில் கல்யாண உற்சவம்
திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்திருவிழாவை ஒட்டி 9ம் நாள் திருவிழா திருக்கல்யாண உற்சவம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. திருச்செங்கோட்டின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாகத் தேர் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

மலைக்கோவிலில் எழுந்தருளி உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா 14 நாட்கள் விமர்சையாக நடக்கும். 9ம் நாள் நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் மற்றும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடந்தது. கைலாசநாதர் ஆலயம் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டு வேலவர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. 

முன்னதாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவில் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி கயிறு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி