திருச்செங்கோட்டில் வள்ளலார் விழா

71பார்த்தது
திருச்செங்கோட்டில் வள்ளலார் விழா
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் வள்ளலார் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சன்மார்க்க சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். பள்ளி மாணவி ஸ்ரீநிதி இறைவணக்கம் பாடினார். துணைத் தலைவர் சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு நூற்றாண்டு கண்டுள்ள திருச்செங்கோடு சன்மார்க்க சங்கத்தின் வரலாறு பற்றியும், சன்மார்க்க சங்க ஸ்தாபகர் காசி விஸ்வநாதர் முதலியாரின் தியாகம் பற்றியும் உரையாற்றினார். 

நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டு வள்ளலாரின் ஜீவகாருண்யம் பற்றி வாழ்த்துரை வழங்கினார். கம்பன் கழகச் செயலாளர் செங்கோட்டுவேலு சன்மார்க்க சங்க செயலாளர் முருகேசன் செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர் சேகர் நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி தாமரைச்செல்வி சினேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பேச்சாளராக வடலூர் ராமலிங்க வள்ளலாரின் சிறப்புகள் பற்றி சேலம் ராமன் சிறப்புரை ஆற்றினார். விழாவின் நிறைவில் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி