திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 51 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ ரூ. 83. 65 முதல் ரூ. 91. 35 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ. 67. 65 முதல் ரூ. 74. 65 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 51 மூட்டை கொப்பரை ரூ. 1. 85 லட்சத்திற்கு ஏலம் போனது.