நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டியினை மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு தொடக்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் திருச்செங்கோடு ஒன்றிய கழக செயலாளர் திரு. வட்டூர் தங்கவேல், ஒன்றிய துணை பெருந்தலைவர் திரு. ராஜவேல், சண்முகா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. திருமூர்த்தி ஆறுமுகம், தேவனாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு. அருண், ஒன்றிய கவுன்சிலர் மேனகா கார்த்தி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு. ரமேஷ், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.