நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றிய கழகம் சார்பாக சித்தாளந்தர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கும் மற்றும் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பரிசளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் விளையாட்டு வீரர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.