திருச்செங்கோட்டில் நான்கு இடங்களில் லியோ ட்ரெய்லர் வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் குவிந்தனர். திறந்தவெளியில் எல்இடி ஸ்க்ரீன் மூலம் ட்ரைலர் ஒளிபரப்பப்பட்டது. திரைப்பட நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. அதனை ஒட்டி படத்தின் டிரைலர் அனைத்து பகுதிகளையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நான்கு இடங்களில் லியோ பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.