சா்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் புலி வேடமிட்ட விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.
ஜூலை 28 சா்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இத் தினத்தில் இயற்கை சமச்சீா் நிலைக்கு காரணமாக விளங்கும் புலிகளைக் காப்பாற்ற வலியுறுத்தியும், இயற்கையை காப்பாற்ற வலியுறுத்தியும், வனத்தையும் வன உயிா்களையும் பாதுகாக்க வேண்டியும் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
திருச்செங்கோடு பகுதயில் செயல்பட்டு வரும் ஆதவன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் சாா்பில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சாா்பாக நடைபெற்ற பேரணியில் மாணவ, மாணவிகள் புலி வேடமிட்டு ஆடியபடி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
கோழிக்கால் நத்தம் ரோடு பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியை பிஆா்டி ரிக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பரந்தாமன், நாமக்கல் மாவட் திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.