திருச்செங்கோடு: வள்ளி கும்மி அரங்கேற்று விழா

59பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 6 நாள் நிகழ்ச்சியில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பெண்கள் முருகன் சுவாமி பாடல்களை பாடி வள்ளி கும்மியாட்டம் ஆடினார்கள். இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி