நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்காம் நாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.