திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் தேர்த்திருவிழாவில் விநாயகர் தேர் திங்கட்கிழமை காலை வடம்பிடித்ததும் மாலை செங்கோட்டுவேலவர் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் நடத்தப்பட்டது. நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.