நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இன்று சனிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மார்கழி மாத பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. அர்த்தநாரீஸ்வருக்கு பால், தயிர், நெய் போன்ற வாசனைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.