நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் 21 நாட்கள் நடைபெறும் கேதார கௌரி விரதம் பூஜை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று 16ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் கேதார கௌரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.