திருச்செங்கோடு: அங்கன்வாடியில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்: பெண் கைது

69பார்த்தது
திருச்செங்கோடு: அங்கன்வாடியில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்: பெண் கைது
பள்ளிபாளையம் பிள்ளையார் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை அங்கன்வாடியில் படித்து வந்தது. அங்கன்வாடி ஆயா சரஸ்வதியை பார்க்க வந்த நபர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சிறுமி அழுதுகொண்டே வீட்டில் சொன்னதை அடுத்து தி. கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சீண்டலுக்கு உடந்தையாக இருந்த சரஸ்வதி கைது செய்யப்பட்டார். சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி