திருச்செங்கோடு நகராட்சியில் கடந்த ஒரு வருடமாக அருள் ஆணையாளராக பணியாற்றி வந்தார். தற்போது பணியிட மாறுதல் பெற்று பல்லடம் நகராட்சிக்கு ஆணையாளராக செல்ல இருப்பதால் திருச்செங்கோடு நகராட்சி நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. நகராட்சி அலுவலர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.