திருச்செங்கோடு தேர்த்திருவிழா: விநாயகர் தேர் வடம்பிடித்தல்

67பார்த்தது
திருச்செங்கோடு தேர்த்திருவிழா: விநாயகர் தேர் வடம்பிடித்தல்
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் தேர்த்திருவிழாவில் விநாயகர் தேர் திங்கட்கிழமை வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் நடத்தப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்பு பெற்ற தலமும், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமுமான ஸ்ரீ அர்த்தநாரீசுவரர் கோயில் தேர்த்திருவிழாவில் விநாயகர் தேர் தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மாலை செங்கோட்டுவேலவர் திருத்தேர் வடம் பிடித்து நான்கு ரதவீதிகளில் சுற்றி வந்து நிலை சேர்ந்தது. அர்த்தநாரீசுவரர் தேர் செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்கள் வடம் பிடிக்கப்படும். ஆதிகேசவப் பெருமாள் தேர் வடம் பிடித்தல் வியாழக்கிழமை நடைபெறும்.

தொடர்புடைய செய்தி