திருச்செங்கோடு பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடக்க உள்ள வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழாவான இன்று (ஜூன் 10) திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகரின் முக்கிய பிரமுகர்கள், கோயில் நிர்வாகிகள் திருத்தேரை வடம் பிடித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருத்தேர் 3 நாட்கள் வடம் பிடிப்பது வழக்கம். முதல் நாளான இன்று (ஜூன் 10) திருத்தேர் நிலைபெயர்க்கப்பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது.