திருச்செங்கோடு; அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்

84பார்த்தது
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா தேரோட்டத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் தேரை வடம் பிடிக்கும் இரண்டாம் நாளில் பூக்கடை வீதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். சிவனடியார்கள் திருவாசகம் பாடல்களை பாடியபடி தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

சிவன், பார்வதி விநாயகர் வேடமிட்ட பக்தர்கள் தேரோடும் வீதியில் சிவதாண்டம் ஆடி-பாடினர். நாட்டுப்புறக் கலைஞர்கள் கரகாட்டம், மயிலாட்டம் ஆடியபடி வந்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தேராட்டம், ஒயிலாட்டம் ஆடினர். 

தேரில் அர்த்தநாரீசுவரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் சிவ சிவ, ஓம்சிவாய நமக, நமசிவாய நமக, என பக்தி முழக்கமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். பழைய பேருந்து நிலைய சந்திப்பில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை தேர் மூன்றாம் நாளாக வடம்பிடிக்கப்பட்டு நிலை சேர்க்கப்படும்.

தொடர்புடைய செய்தி