திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலத்தில் 128 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
இதில் முதல்தரம் ரூ. 228 முதல் ரூ. 245.75 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 186 முதல் ரூ. 205 வரையிலும் விலைபோனது. மொத்தமாக ரூ. 13.17 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.மல்லசமுத்திரம் கிளையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 67 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ 5.32 லட்சமாகும். முதல்தரம் ரூ. 175 முதல் ரூ. 250.75 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 175 முதல் ரூ. 205.60 வரையிலும் விற்பனையானது. அடுத்த கொப்பரை ஏலம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது.