திருச்செங்கோடு ஒன்றியம் சித்தளந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பூங்கொத்துகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை சி.பி.சாந்தி, உதவி ஆசிரியைகள் ராதாமணி, ஜாஸ்மின் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பிரியங்கா உள்ளிட்டோர் மாணவர்களை வரவேற்றனர்.