கல்குவாரி வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

68பார்த்தது
கல்குவாரி வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
எளையாம்பாளையத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை, எளையாம்பாளையத்தில் கல்குவாரிகள், கிரசா்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து எம். சான்ட், பி. சாண்ட், ஜல்லி வகைகள், பாறை கற்கள் கனரக வாகனங்கள், டிப்பா் லாரிகளில் அதிக பாரம் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. மாவட்ட ஆட்சியா் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், பாதுகாப்பு வளையங்கள் அமைக்காமல் நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றி கனரக வாகனங்கள் இந்த வழியாகச் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனா். சாலைகளும் சேதமடைகின்றன. எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி