நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம், இன்று எலச்சிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்று வழங்கினர். அதில் எலச்சிபாளையம் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. அங்குள்ள கனரக வாகனங்கள் அதிகளவு பாறை கற்களை டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்வதால், தினந்தோறும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.