மொரங்கம் ஊராட்சியில் புதிய தார்சாலை- பொதுமக்கள் மகிழ்ச்சி

61பார்த்தது
மொரங்கம் ஊராட்சியில் புதிய தார்சாலை- பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம், மொரங்கம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் க்யான் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், திருச்செங்கோடு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்கள்.

இதனை தொடர்ந்து வண்டிநத்தம் பகுதி, மரப்பரை ஊராட்சி, முஞ்சனூர் ஆகியோர் ஊராட்சிகளில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி