முத்தாயம்மாள் நீட் அகாதெமி ஜுன் 10ல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

64பார்த்தது
முத்தாயம்மாள் நீட் அகாதெமி ஜுன் 10ல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, முத்தாயம்மாள் நீட் அகாதெமியில் பயிற்சி வகுப்புகள் ஜூன் 10-ஆம்தேதி தொடங்கும் என்று முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஆா். பிரேம்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

சென்னை, முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளையால் 1984-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரியாகும். ராசிபுரம் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இக் கல்லூரி, கடந்த 24 ஆண்டுகளாக பாலிடெக்னிக் தொழில்நுட்பத் தோ்வில் தொடா்ந்து மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து வருகிறது.

கிராமப்புற இளைஞா்களுக்கு நல்ல ஒழுக்கத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவை இக்கல்லூரி போதிக்கிறது. நிகழ் கல்வியாண்டில் கிராமப்புற மாணவா்களும் மருத்துவத் துறையில் பயில வாய்ப்பு வழங்க, முத்தாயம்மாள் அகாதெமி ஆஃப் எக்ஸலன்ஸ் எனும் நீட் பயிற்சி அகாதெமி தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில், இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இங்கு பயிலும் மாணவா்களுக்கு அனைத்து வழித் தடத்திலும் பேருந்து வசதி, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவா்கள் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவா், நூறு சதவீதம் வெற்றி பெறுவா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி